Travel & Holidays
6 March 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு 100 சதவீதம் உள் அறைகளிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை குழந்தையை நீங்கள் மருத்துவமனையில் பெற்றெடுத்தீர்கள் என்றால், வீடு வரும் வரையில் சில நிமிடங்களுக்கு மட்டும் வெளிப்புற பயணத்தை மேற்கொள்ளுவீர்கள். இதற்குப் பிறகு பல வாரங்கள் ஆகும். முதல் சில நாட்கள் அல்லது வாரங்களில் புதிதாக பிறந்த குழந்தையுடன் மன ரீதியாக மற்றும் உடல் ரீதியாக பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள தாயாரான நீங்கள் முயற்சி செய்வீர்கள். அது மட்டுமல்லாமல் குழந்தைக்கு பாலூட்டுவது, டயப்பர்களை மாற்றுவது, கொஞ்சம் வேடிக்கை காண்பிக்க முயற்சிப்பது, தூங்க வைப்பது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்வீர்கள். இதற்கிடையே நீங்களும் தூங்க வேண்டியிருக்கும்.
மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் செய்து முடித்த பிறகு, உங்கள் வாழ்க்கை ஒரு சீரான நிலையை அடைந்து விட்டதாக உங்களுக்கு தோன்றும். மேலும் ஒரே அறைக்குள் அடைந்து கிடப்பது சலித்துப் போய் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புவீர்கள். புதிய காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். புதிதாக பிறந்த உங்கள் குழந்தையுடன் வெளியிடத்திற்குச் சென்று கொஞ்ச நேரம் செலவழிக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கையான விஷயம் தான்.
வெளியிடங்களுக்குச் செல்ல திட்டமிடுங்கள். நாள் ஒன்றில் புதிய குழந்தையுடன் வெளியிடத்திற்குச் செல்ல சிறப்பான நேரம் என்று சில தருணங்கள் இருக்கும். குறிப்பாக, அதிகாலைப் பொழுதில் வெளியிடங்களுக்குச் சென்றால் மால்கள், பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் கூட்டங்களை தவிர்க்க முடியும். தொந்தரவு இல்லாமல் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற உங்கள் கனவை கலைப்பதாக மக்கள் கூட்டம் அமையும். எனவே, அதற்கு தகுந்தாற்போல திட்டமிட்டுக் கொள்ளவும்.
மால் அல்லது பல்பொருள் அங்காடி போன்ற கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு பச்சிளம் குழந்தையை அழைத்துச் செல்ல சில மாதங்கள் வரையில் பெற்றோர் காத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். சுமார் 40 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று சில மருத்துவர்களும், 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று சில மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.
முதல் சில தருணங்களில் உங்கள் பச்சிளம் குழந்தையை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது பருவநிலை நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதுவும் கூட்டம் நிறைந்த இடமாக இருக்கக் கூடாது.
பச்சிளம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது பெரியவர்களைப் போல சிறப்பான அளவில் இருக்காது. ஆகவே, நோய் வாய்ப்பட்ட நபர்களுடன் பேசுவதை தவிர்க்கவும்.
குழந்தைக்கு அசௌகரியமான ஆடை அணிவிக்க கூடாது என்பதில் கவனமாக இருங்கள். குழந்தையை முதல் ஒன்றிரண்டு முறை வெளியிடத்திற்கு அழைத்துச் செல்லுகையில் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் நீங்கள் தீர்வு காண வேண்டும். அதே வேளையில், குழந்தைக்கு அசௌகரியமான ஆடையை அணிவிக்க கூடாது. இது உங்கள் குழந்தையின் ஃபோட்டோ இன்ஸ்டாகிராமில் க்யூட்டாக காட்சியளிக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் மிக முக்கியமானது.
வெளியிடங்களுக்கு செல்லும் போது, தேவையான பொருட்களை உடன் எடுத்துச் செல்லவும். உதாரணத்திற்கு, வீட்டை விட்டு அடுத்த சில மணி நேரங்களுக்கு வெளியிடங்களில் இருக்கப் போகிறீர்கள் என்றால் நீங்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட டயப்பர்கள், பேபி வைப்ஸ், ஹேண்ட் சானிடைசர், மாற்று ஆடைகள், ஒரு டவல் போன்ற சில பொருட்களை நீங்கள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.
குழந்தைகளை குதூகலப்படுத்த மறக்காதீர்கள். உங்கள் குழந்தையுடன் சிறப்புமிக்க நேரத்தை நீங்கள் செலவழிக்கவில்லை மற்றும் நீங்களும் என்ஜாய் செய்யவில்லை என்றால், நீங்கள் போட்டு வைத்த அனைத்து திட்டங்களும், ஏற்பாடுகளும் வீணாகிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
குழந்தையின் வாழ்க்கையில் முதல் முறையாக எங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிடுங்கள். அதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பச்சிளம் குழந்தையை முதல்முறை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறீர்களா? என்ன செய்ய வேண்டும் என்பதற்கு மேலே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.
Yes
No
Written by
chandrikaiyer
chandrikaiyer
கர்ப்பக்காலத்தின் 9ஆவது வாரத்தின் அல்ட்ராசவுண்ட்: என்ன எதிர்பார்க்கவேண்டும் மற்றும் இதில் அபாயம் தரும் அறிகுறிகள் யாவை?
குழந்தைகள் குளிக்கும் நேரத்தை வேடிக்கையாகவும், குழந்தைகளுக்கு ரசிக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கான 5 வழிகள்
பேறு காலத்தில் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள், அபாயங்கள் மற்றும் பல
கருத்தரிக்க இயற்கையாக விந்தணுவை வலிமையாக்குவது எப்படி
8 மாத குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்மார்கள் தேவையான குறிப்புகள்
உணர்ச்சி நல்வாழ்வு என்றால் என்ன | அதன் முக்கியத்துவம் மற்றும் அறிகுறிகள்
கர்ப்ப காலத்தில் தாய்ப்பால் எப்போது சுரக்க ஆரம்பிக்கிறது?
குழந்தைகளின் உச்சி இரத்தக்கட்டி பற்றிய தகவல்கள் , காரணங்கள் மற்றும் சிகிச்சை
குழந்தைகளுக்கு வரும் பொடுகு காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
குடல் எரிச்சல் சிண்ட்ரோம் - அர்த்தம், காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சைகள்
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Trusted by 10+ million young parents Mylo is India’s #1 Pregnancy & Parenting App. Mylo app will guide you through your whole parenting journey. Download now
Ayurvedic Face Cream | Ayurvedic Face Serum | Ayurvedic Face Scrub | Ayurvedic Hair Oil | Ayurvedic Face Pack | Ayurvedic Skin Care Products | AYURVEDIC CARE PRODUCTS - SHOP BY CONCERN | Ayurvedic Stretch Marks Products | Ayurvedic Skin Whitening Products | Ayurvedic Tanning Products | Ayurvedic Black Head Products | Anti Ageing Ayurvedic Products | Ayurvedic Uneven Skin Tone Products | Ayurvedic Hairfall & Damage Repair Products | Ayurvedic Pain Relief Oil | Ayurvedic Massage Oil | AYURVEDIC CARE PRODUCTS - SHOP BY RANGE | AYURVEDIC CARE PRODUCTS - COMBOS | KUMKUMADI COMBO | UBTAN COMBO |