Browse faster in app
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Pregnancy arrow
  • கர்ப்பக்காலத்தில் நெஞ்செரிச்சல் - விரைவாக நிவாரணம் பெறுவது எப்படி? arrow

In this Article

    கர்ப்பக்காலத்தில் நெஞ்செரிச்சல் - விரைவாக  நிவாரணம் பெறுவது எப்படி?

    Pregnancy

    கர்ப்பக்காலத்தில் நெஞ்செரிச்சல் - விரைவாக நிவாரணம் பெறுவது எப்படி?

    22 February 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    நெஞ்செரிச்சல் என்பது கர்ப்பக்காலத்தில், குறிப்பாக முதல் மூன்று மாதத்தில் அடிக்கடி ஏற்படும் ஒரு நிலை. கர்ப்பக்காலத்தின் போது ஏதோ ஒரு நேரத்தில் கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சலை எதிர்கொள்வது சகஜமே. ஆனால் பல பெண்களுக்கு ஏற்படும் தீவிர நிலை சில வாரம் அல்லது மாதங்கள் வரை நீடிக்கலாம். கர்ப்பக்காலத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சல் அசௌகரியத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தலாம். அதிர்ஷ்டவசமாக, இந்த அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெற கர்ப்பிணிகள் கடைப்பிடிக்கவேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன. கர்ப்பக்காலத்தில் எப்படி நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்துவது என்பதற்கான சில எளிமையான குறிப்புகளை பார்ப்பதற்கு முன்பு, கர்ப்பக்காலத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சல் என்றால் என்ன என்பதை முதலில் நாம் அறிந்துக்கொள்வோம்.

    கர்ப்பக்காலத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சல் என்றால் என்ன?

    பொதுவாக வயிற்றில் ஏற்படும் அமிலப் பின்னோட்டத்தினாலும், நமது வயிறு மற்றும் வாயை இணைக்கும் உணவுக்குழாயில் ஏற்படும்

    எரிச்சலினாலும் மார்பு அல்லது தொண்டையில் ஏற்படும் எரிச்சல் உணர்வே நெஞ்செரிச்சல் எனப்படுகிறது. அமிலப் பின்னோட்டத்தினால் ஏற்படும் நெஞ்செரிச்சல் - வயிற்றில் இருக்கும் உள்ளடக்கங்கள் மீண்டும் உணவுகுழாயினுள் செல்வது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உணவு அல்லது திரவங்கள் உங்கள் உணவுக்குழாயிலிருந்து மிக விரைவாக வயிற்றுக்குள் செல்லும் போது இவ்வாறு நிகழ்கிறது.

    நெஞ்செரிச்சல் என்பது தற்காலிகமான நோயாகவோ அல்லது நீண்ட நாள் நோயாகவோ இருக்கலாம். இது கர்ப்பக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்(பொதுவாக முதல் மூன்று மாதங்களில்). கர்ப்பக்காலத்தில் நெஞ்செரிச்சல் நிலை பெரும்பாலும் அடிக்கடி ஏற்பட்டாலும், அதன் அடிப்படை காரணத்திற்கு ஏற்ற சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில் அவை கர்ப்பக்காலத்திற்கு பின்னரும் தொடரலாம்.

    கர்ப்பக்காலத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலுக்கான பொதுவான அறிகுறிகள் யாவை?

    கர்ப்பக்காலத்தில் ஏற்படும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

    • நெஞ்சு மற்றும் தொண்டையில் ஏற்படும் நெஞ்செரிச்சல் மெதுவாக வாயிற்கு பரவுதல்.

    • குமட்டல் மற்றும் வயிற்று வலி

    • வாந்தி

    • படுத்திருக்கும் போது அசௌகரியமாக உணருதல்

    • தூக்கமின்மை (நெஞ்செரிச்சலின் விளைவால்)

    • வாய் துர்நாற்றம்

    • கொழுப்பு சத்து நிறைந்த அல்லது பொறிக்கப்பட்ட உணவினால் ஏற்படும் அதீத அசௌகரியம்

    கர்ப்பக்காலத்தில் ஏற்படும் அதிக நெஞ்செரிச்சலுக்கான காரணிகள் யாவை?

    கர்ப்பக்காலத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் மற்ற செரிமான பிரச்சனைகள் கோபமூட்டுவதாகவும் அசௌகரியமாகவும் இருக்கலாம். இது வயிற்றின் மேல் இருக்கும் சுருக்குத்திசை விரைவாக தளர்வடையும் போது நெஞ்சில் ஏற்படும் அசௌகரியத்தினாலேயே விளைகிறது. இது கொழுப்பு அல்லது கார உணவுகள், மது அல்லது கஃபைன் போன்றவற்றை உட்கொண்டால் மேலும் மோசமடையலாம்.

    வளர்ந்துவரும் கர்ப்பப்பை வயிற்றிற்கு கொடுக்கும் அழுத்தத்தினால் வயிற்றில் ஏற்படும் அமில பின்னோட்டமே கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக்காலத்தில் கூடுதல் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா.

    கர்ப்பிணிகள் கர்ப்பக்காலத்தில் எதிர்கொள்ளும் நெஞ்செரிச்சலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன, அவை பின்வருமாறு

    • குமட்டல் வராமலிருக்க எடுக்கும் மருந்து

    • மிக வேகமாக உணவு உட்கொள்ளல் (இது வயிற்றை மிக விரைவாக காலி செய்துவிடும்)

    • ஒரே நேரத்தில் அளவிற்கு அதிகமாக உண்ணுதல் (இது வயிற்றை கூடுதல் அளவில் அமிலத்தை உற்பத்தி செய்யும்)

    • கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களை பருகுதல் (பின்னோட்டத்தை ஏற்படுத்தும்)

    • புகைப்பிடித்தல் (அமில பின்னோட்டத்தை ஏற்படுத்தும்)

    • சாப்பிட்டவுடன் கீழே படுத்து கொள்தல்

    • அதிக காரமான உணவை உட்கொள்ளல்

    • கர்ப்பக்காலத்தில் நாட்கள் போக போக நெஞ்செரிச்சல் அதிகமாகும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது முக்கியமாக வளர்ந்துவரும் கர்ப்பப்பை வயிற்றிலும் மற்று செரிமான உறுப்புகளிலும் கொடுக்கும் அழுத்தத்தினாலுமே ஏற்படுகிறது.

    இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்குப் பிறகு வரும் தூக்கமின்மை

    கர்ப்பக்காலத்தில் ஏற்படும் அதிக நெஞ்செரிச்சலை எப்படி குறைப்பது?

    கர்ப்பக்காலத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலிலிருந்து நிவாரணம் பெற பல வழிகள் இருக்கின்றன. இதிலிருக்கும் சிலவற்றிற்கு உணவு பழக்கத்தில் சிறிய மாற்றங்களை செய்தாலே போதுமானது, அதாவது மது அருந்துதலை தவிர்த்தல் அல்லது குறைத்துக்கொள்தல், காரமான உணவுகளை தவிர்த்தல் போன்றவை. இது ஒருபுறம் இருக்க, மற்ற அறிகுறிகளுக்கு கஃபைனை குறைத்தல், நாள் முழுவதும் சிறிது சிறிதாக உணவருந்துதல் போன்ற அன்றாட வாழ்க்கைமுறையில் பெரிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. கர்ப்பிணிகள் அவர்களுக்கு நிவாரணமளிக்கும் ஒரு வழியை கண்டறிய பல முறைகளை முயற்சிக்க வேண்டும். வீட்டிலேயே எப்படி கர்ப்பக்காலத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலிலிருந்து நிவாரணம் பெறுவது என்பதை அறிய பின்வரும் எளிய குறிப்புகளை பின்பற்றவும்:

    1. நிறைய தண்ணீர் குடித்தல்

    தண்ணீர் அடிக்கடி நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் வயிறு உப்புசத்தை குறைக்க உதவும், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 டம்பளர் தண்ணீராவது குடிப்பது நல்லது!

    2. சிறிது சிறிதாக உணவருத்துதல்

    சிறிது சிறிதாக உணவருந்துதல் வாயுவை குறைக்க உதவும், மேலும் ஒரு நேரத்தில் சிறிது உணவு அருந்துதல் உங்கள் உடல் உணவை எளிதாகவும் சிறப்பாகவும் செரிக்க உதவும்.

    3. அதிகம் சாப்பிடாதீர்கள்

    அடிக்கடி நீர் அருந்துதல் மற்றும் ஆரோக்கியமான உணவருந்துதல் போன்றவை கர்ப்பிணிகளை ஆரோக்கியமாக இருக்க வைப்பதுடன் நோய்வாய்ப்படாமல் தடுக்கவும் உதவுகிறது. நெஞ்செரிச்சல் தொடர்ந்தால், ஓவர்-தி-கவுண்டர்/நேரடியாக மருந்துக்கடையிலிருந்து பிரிலோசெக்(ஒமெப்ரஸோல்) அல்லது நெக்சியம் (எசுமப்பிரசோல்) போன்றவைகளை முயற்சித்து பாருங்கள்.

    4. சாப்பிட்டவுடன் குறைந்தது 30 நிமிடம் கழித்து படுக்கவும்

    சாப்பிட்டவுடன் படுப்பது அமில பின்னோட்டத்தை ஏற்படுத்தும், எனவே இது நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். எளிமையாக சொல்வதெனில் சாப்பிட்டவுடன் கால்களை நீட்டி நேராக படுப்பதை விட சிறிது நேரம் நடப்பதே கர்ப்பிணிகளுக்கு நல்லது.

    எப்போது மருத்துவரை பார்க்கவேண்டும்?

    கர்ப்பக்காலத்தில் பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை நெஞ்செரிச்சல். இதை நீங்கள் கண்டுக்கொள்ளாமலும் இருக்க முடியாது, ஏனெனில் உங்கள் நெஞ்சு மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சல் உணர்வை தாங்கிக்கொள்வது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதுமட்டுமின்றி, இது உங்கள் நிம்மதியான உறக்கத்தை பாதிக்கும். அப்படியெனில், எப்போது கர்ப்பிணி நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு மருத்துவரை பார்க்க வேண்டும்?

    வீட்டு வைத்தியம், வாழ்க்கைமுறை மாற்றங்கள், மற்றும் OTC மருந்துகள் நெஞ்சரிச்சலுக்கு சரியான தீர்வை வழங்கவில்லை என்றால், அந்த கர்ப்பிணி கட்டாயம் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். இருப்பினும், OTC மருந்து நெஞ்செரிச்சலை மேலும் மோசமடையச்செய்தாலும் ஒருவர் கண்டிப்பாக உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். இறுதியாக, குழந்தை பிறந்த பல நாட்களுக்கு பிறகும் இந்த நெஞ்செரிச்சல் குறையவில்லை எனில் அதற்கு என்ன காரணம் என்று அறிய ஒருவர் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும்.

    முடிவுரை :

    முதல் மூன்று மாதங்களில் மிக பொதுவாக ஆரம்பிக்கும் கர்ப்பக்கால அறிகுறி நெஞ்செரிச்சல். வயிற்றிலிருக்கும் அமில பின்னோட்டம் அதாவது அமிலத்தை மேல் நோக்கி உணவுக்குழாய்க்குள் செலுத்துவது அசௌகரியமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். நீங்கள் கர்ப்பக்காலத்தில் எப்படி நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்துவது, பொறுத்துக்கொள்வது மற்றும் அதிலிருந்து நிவாரணம் பெறுவது என்று தெரியாமல் இருந்தால், அதை பொறுத்துக்கொள்ள வேண்டாம் - அதிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும் என்று அறிய மருத்துவரிடம் உடனடியாக கலந்தாலோசித்திடுங்கள்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    aviraparaiyar

    aviraparaiyar

    Read from 5000+ Articles, topics, verified by MYLO.

    Download MyloLogotoday!
    Download Mylo App

    Related Topics

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    100% Secure Payment Using

    Stay safe | Secure Checkout | Safe delivery

    Have any Queries or Concerns?

    CONTACT US
    +91-8047190745
    shop@mylofamily.com
    certificate

    Made Safe

    certificate

    Cruelty Free

    certificate

    Vegan Certified

    certificate

    Toxic Free

    About Us

    Trusted by 10+ million young parents Mylo is India’s #1 Pregnancy & Parenting App. Mylo app will guide you through your whole parenting journey. Download now

    All trademarks are properties of their respective owners.2017-2023©Blupin Technologies Pvt Ltd. All rights reserved.