Updated on 6 March 2023
நீங்கள் ஒரு புதிய பெற்றோராக இருந்தால், உங்கள் குழந்தை உங்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களைச் செய்யும். சில சமயங்களில் குழந்தை சத்தம் எழுப்பியோ அல்லது முகங்களில் சில பாவங்களை காண்பித்து உங்களை சிரிக்க வைக்கும், ஆனால் சில சமயங்களில் குழந்தைகளின் ஹெல்த் மற்றும் சேஃப்டி உங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தும். அக்கறையுள்ள பெற்றோராக, உங்கள் குழந்தை ஹெல்த்தியாக இருப்பதை உறுதிசெய்ய நீங்கள் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.
அதுபோன்ற நடவடிக்கைகளில் முக்கியமானது என்னவென்றால், உங்கள் குழந்தையின் சுவாசத்தை நீங்கள் தொடர்ந்து பரிசோதித்துக்கொண்டே இருக்க வேண்டும், முதல் முறை பெற்றோர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு பிரச்சனைகளை சரிசெய்ய முயற்சிப்பார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை, இது நீங்கள் குழந்தையின் பெற்றோர் என்ற உள்ளுணர்வால் ஏற்படுவதாகும். பிறந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு 14 முதல் 17 மணிநேரம் வரை தூங்கலாம், அத்துடன் உங்கள் குழந்தையின் தூக்க அட்டவணையும் உங்கள் தூக்க அட்டவணையையும் தொந்தரவு செய்வது யாருக்கும் பிடித்தமானதாக இருக்காது.
பொதுவாக, 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் நிமிடத்திற்கு 40 சுவாசங்களை எடுத்துக்கொள்கிறார்கள். தூக்கத்தின் போது, சுவாசம் நிமிடத்திற்கு 20 சுவாசமாக குறையலாம். குறிப்பாக பிறந்த குழந்தைகளின், சுவாசம் படிப்படியாக வேகமாகவும், ஆழ்ந்ததாகவும், பின்னர் மெதுவாகவும் மேலோட்டமாகவும் இருக்கும் இந்த முறை காலமுறை சுவாசம் அதாவது பீரியாடிக் பிரீத்திங் என்று அழைக்கப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தையின் சுவாசம் 5 முதல் 10 வினாடிகளுக்கு நின்று, பின்னர் 10 முதல் 15 வினாடிகளுக்கு நிமிடத்திற்கு 50 முதல் 60 சுவாசங்கள் வரை வேகமாகத் தொடங்கும். பிறந்த குழந்தைகள், அவர்கள் தூங்கும்போது/ஓய்வெடுக்கும்போது கூட, ஒரு மூச்சுக்கு இடையில் 10 வினாடிகளுக்கு மேல் மூச்சை இடைநிறுத்தக்கூடாது.
உங்கள் குழந்தையின் இயல்பான சுவாச முறையை நீங்கள் கவனிக்க வேண்டும், இந்த வழியில் நீங்கள் முன் எப்போதும் கண்டிராத சுவாச முறைகளின் அறிகுறிகளைக் கண்டறிந்தால் அப்போது போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உங்கள் குழந்தையின் சுவாச முறையை நீங்கள் இப்போது நன்கு அறிந்திருக்கிறீர்கள், மேலும் ஏதேனும் அசாதாரண சுவாச முறையை இனிமேல் உங்களால் எளிதாகக் கண்டறிய முடியும். இருப்பினும், அசாதாரணமானது என்று குறிப்பிடுவது உங்கள் குழந்தையின் உடலில் தவறு இருப்பதாக அர்த்தமல்ல. நீங்கள் குழந்தை மருத்துவரை அழைப்பதற்கு முன், பின்வரும் சில அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.
ஆழ்ந்த இருமல், குழந்தையின் நுரையீரலில் சளி தொற்று இருப்பதற்கான அறிகுறியாகும், மேலும் குழந்தையின் உடல் தடுக்கப்பட்ட காற்றுப்பாதைகளைத் திறக்க முயற்சிக்கும்போது குழந்தை உறுமும். சளியை அழிக்க சலைன் டிராப்களைப் பயன்படுத்தவும்.
இது பொதுவாக குழந்தை சுவாசிப்பதில் அதிக முயற்சி எடுக்கிறது என்பதற்கான குறிகாட்டியாகும்.
தொடர்ந்து வரும் வறட்டு இருமல், குழந்தை ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மூச்சு விடுவதில் சிரமத்தை கொண்டிருப்பதைக் குறிக்கும். டெல்லி போன்ற மிகவும் மாசுபட்ட நகரங்களில் வாழும் மக்களுக்கு, காற்று சுத்திகரிப்பு கருவி (ஏர் பியூரிஃபையர் ) அவசியம்.
குழந்தையின் சுவாச அமைப்பில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் குழந்தை உணவை உட்கொள்ள மறுக்கும். உங்கள் குழந்தைக்கு நன்றாக உணவளிப்பது முக்கியம்.
எனர்ஜி லெவல் குறைவது உங்கள் குழந்தைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமலிருப்பதையும் சுவாச பிரச்சனைகள் இருப்பதையும் குறிக்கிறது. குழந்தை போதுமான அளவு தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே! - குழந்தைகள் குளிக்கும் நேரத்தை வேடிக்கையாகவும், குழந்தைகளுக்கு ரசிக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கான 5 வழிகள்
• உங்கள் குழந்தையின் சுவாசத்தை எத்தனை முறை சரிபார்க்க வேண்டும்?
• கவலை வேண்டாம்! உங்கள் குழந்தையின் சுவாசத்தை அவ்வப்போது சரிபார்ப்பது முற்றிலும் இயல்பானது.
Yes
No
Written by
chandrikaiyer
chandrikaiyer
How to Check Pregnancy at Home with Salt?
Late Heartbeat in Pregnancy
Are you Concerned about rectal bleeding in your pregnancy? Here're some relief tips for you!
Colostrum or First Milk : A complete guide about its Meaning, Benefits & Side Effects
Diagnosis and Treatment of Vaginal infections during pregnancy to prevent any complications
Popcorn During Pregnancy Benefits & Risks
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Trusted by 10+ million young parents Mylo is India’s #1 Pregnancy & Parenting App. Mylo app will guide you through your whole parenting journey. Download now
Ayurvedic Face Pack | Ayurvedic Skin Care Products | AYURVEDIC CARE PRODUCTS - SHOP BY CONCERN | Ayurvedic Stretch Marks Products | Ayurvedic Skin Whitening Products | Ayurvedic Tanning Products | Ayurvedic Black Head Products | Anti Ageing Ayurvedic Products | Ayurvedic Uneven Skin Tone Products | Ayurvedic Hairfall & Damage Repair Products | Ayurvedic Pain Relief Oil | Ayurvedic Massage Oil | AYURVEDIC CARE PRODUCTS - SHOP BY RANGE | AYURVEDIC CARE PRODUCTS - COMBOS | KUMKUMADI COMBO | UBTAN COMBO | Baby | Disposable Diapers | Baby Wipes | Baby Creams & Lotions |