hamburgerIcon
login
STORE

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article Continues below advertisement

  • Home arrow
  • Baby Care arrow
  • குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 4 முக்கியமான ஊட்டச்சத்துகள் ( The 4 Most Common Doctor Recommended Supplements for Babies In Tamil) arrow

In this Article

    குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 4 முக்கியமான ஊட்டச்சத்துகள் ( The 4 Most Common Doctor Recommended Supplements for Babies In Tamil)

    Baby Care

    குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 4 முக்கியமான ஊட்டச்சத்துகள் ( The 4 Most Common Doctor Recommended Supplements for Babies In Tamil)

    17 August 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    Article Continues below advertisement

    உங்கள் குழந்தைக்கு என்ன விட்டமின் சத்து தேவை என்பது குறித்து நீங்கள் குழப்பம் அடையும் பட்சத்தில், இந்தத் தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தை தரக் கூடும். குழந்தைகளுக்கு பெரும்பாலான ஊட்டச்சத்து தாய்ப்பால் மூலமாகத் தான் கிடைக்கிறது. உங்கள் குழந்தை திட உணவுகளை சாப்பிடத் தொடங்கும்போது, பல வகைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய முழுமையான டயட் வழங்கப்படுவதை உறுதி செய்யுங்கள்.

    சில குழந்தைகளுக்கு சில சத்துகள் கூடுதலாக தேவைப்படலாம். உதாரணத்திற்கு குறைப் பிரசவத்தில், 1.5 கிலோ எடைக்கும் குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு கூடுதல் சத்து தேவைப்படும். கூடுதலாக நீங்கள் கொடுக்கும் ஊட்டச்சத்துகள் உங்கள் குழந்தையின் உடல் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையும்.

    குழந்தைகளுக்காக பரிந்துரை செய்யப்படும் சத்துகள் சில(Some of the common supplements which are recommended for babies include):

    1.விட்டமின் கே(Vitamin K)

    பிரசவம் நடந்த உடனேயே, அனைத்து குழந்தைகளுக்கும் ஹீமோரஜிக் நோயை தவிர்ப்பதற்காக விட்டமின் கே சத்து ஊசி செலுத்தப்படுகிறது. இது தவிர, நம் உடலில் ரத்தம் உறைபடுவதைத் தவிர்க்க விட்டமின் கே சத்து அவசியமானதாகும்.

    இதையும் படிக்கலாமே! - தாய்ப்பால் கொடுக்கும்போது எடை இழப்பு

    2. விட்டமின் டி(Vitamin D)

    உடலில் எலும்புகளை கட்டமைக்க தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உறிஞ்சப்படுவதற்கு விட்டமின் டி உதவிகரமாக இருக்கிறது. விட்டமின் டி குறைபாடு காரணமாக, ரிக்கெட்ஸ் என்று சொல்லக் கூடிய எலும்பு வலுவிழக்கும் நோய் தாக்கப்படலாம். குறிப்பாக, இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இந்த நோய் தாக்கும். தாய்ப்பாலில் விட்டமின் டி போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை என்பதால், தாய்ப்பால் அருந்தும் அனைத்து குழந்தைகளுக்கும் விட்டமின் டி சத்துமருந்து தேவை.

    3. விட்டமின் பி12(Vitamin B12)

    உடலில் நரம்புகள் மற்றும் ரத்த செல்கள் ஆகியவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விட்டமின் பி12 உதவுகிறது. மேலும், அனைத்து செல்களிலும் இருக்க வேண்டிய மரபுக் கூறுகளான டிஎன்ஏ வளர்ச்சிக்கும் உதவுகிறது. விட்டமின் பி12 சத்து குறைபாட்டால் ஒரு வகை அனீமியா ஏற்படும். இதனை மெகாலோபிளாஸ்டிக் அனீமியா என்று குறிப்பிடுகின்றனர். இதில் பாதிக்கப்படும் நபர்களுக்கு சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். விட்டமின் பி12 தாவிர வகை உணவுகளில் கிடைப்பதில்லை. ஆக, சுத்த சைவ உணவை கடைப்பிடிக்கும் பாலூட்டும் தாய்மார்கள், அவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் விட்டமின் பி12 சத்து பிற வகையில் போதுமான அளவுக்கு கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    4. இரும்புச்சத்து(Iron)

    தாய்ப்பாலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கிறது. ஆனால், போதுமான இரும்புச்சத்து இல்லாமல் பிறக்கும் குழந்தைகளை அனீமியா நோயில் இருந்து பாதுகாக்க இரும்புச்சத்து அவசியம். குறைந்தபட்சம் 4 முதல் 6 மாதங்களுக்கு இது அவசியமாகும். உங்களுக்கு கட்டுப்படுத்தப்படாத மகப்பேறு கால நீரிழிவு இருந்தால் அல்லது உங்கள் குழந்தை குறைப்பிரசவம் மூலமாக பிறந்திருந்தால் அல்லது 2.7 கிலோ எடைக்கும் குறைவாக இருந்தால், கர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தைக்கு இரும்புச்சத்து போதுமான அளவில் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

    TAGS :

    supplements for babies in tamil, important vitamins for babies in tamil, The 4 Most Common Doctor Recommended Supplements for Babies In English, The 4 Most Common Doctor Recommended Supplements for Babies In Hindi, The 4 Most Common Doctor Recommended Supplements for Babies In Telugu, The 4 Most Common Doctor Recommended Supplements for Babies In Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.